ADDED : ஆக 09, 2011 02:20 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் பொதிகை பாலிடெக்னிக் கல்லூரி, முத்துமெடிக்கல்
அறக்கட்டளை, ஹைடெக் ஆய்வக பரிசோதனை மையம் ஆகியவை சார்பில் சிறப்பு ரத்த வகை
கண்டறிதல் முகாம் நடந்தது.
கல்லூரி தாளாளர் கணேசன் தலைமை வகித்து முகாமை
துவங்கி வைத்தார். கல்லூரி பொருளாளர் தர்மராஜன், செயலாளர் வேல்முருகன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், முத்து ரத்த வங்கி மையம் வீரமுத்து
தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் 175 மாணவ, மாணவிகளுக்கு ரத்த மாதிரிகளை
எடுத்து, ரத்த வகைகளை கண்டறிந்தனர். முன்னதாக, கல்லூரி முதல்வர் ஜெகதீசன்
வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் வில்லியம்பாப்பு நன்றி கூறினார்.


