ADDED : ஆக 09, 2011 02:54 AM
புதுச்சேரி : நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி கொரவள்ளிமேடு கிராமத்தில் நடந்தது.சுப்பிரமணிய படையாட்சியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த துவக்க விழாவிற்கு என்.எஸ்.எஸ்., பொதுப்பிரிவு திட்ட அலுவலர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.
தகவல் தொடர்பு குழுத் தலைவர் ஜானகிராமன் வரவேற்றார்.கொரவள்ளிமேடு பள்ளி திட்ட அலுவலர் முத்து அய்யசாமி, வருவாய் ஆய்வாளர் அய்யனார், மண்டல அமைப்பாளர்கள் கதிரேசன், திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். தியாகராஜன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கையேடுகளை மக்களுக்கு வழங்கி கணக்கெடுப்பு பணியைத் துவக்கி வைத்தார். அறக்கட்டளை தலைவர் தேவதாஸ், மக்கள் நல்வாழ்வு நற்பணி இயக்கச் செயலர் மாறன் வாழ்த்தி பேசினர். விழா ஏற்பாடுகளை திட்ட உறுப்பினர்கள் ராஜா, பத்மநாபன், பாலன் செய்திருந்தனர். கலை வரவேற்பு குழுத்தலைவர் லட்சுமி நன்றி கூறினார்.


