/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ஆசிரியர்களுக்கு ஆங்கிலமொழி எழுதுதல் திறன் வளர்ப்பு பயிற்சிஆசிரியர்களுக்கு ஆங்கிலமொழி எழுதுதல் திறன் வளர்ப்பு பயிற்சி
ஆசிரியர்களுக்கு ஆங்கிலமொழி எழுதுதல் திறன் வளர்ப்பு பயிற்சி
ஆசிரியர்களுக்கு ஆங்கிலமொழி எழுதுதல் திறன் வளர்ப்பு பயிற்சி
ஆசிரியர்களுக்கு ஆங்கிலமொழி எழுதுதல் திறன் வளர்ப்பு பயிற்சி
ADDED : ஆக 09, 2011 02:19 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் வட்டார வளமையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம்
சார்பில் 6,7,8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி எழுதுதல் திறன்
வளர்ப்பு பயிற்சி நடந்தது. பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர்
கலைச்செல்வி துவங்கி வைத்தார். இதில் ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ்
குழுமமும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து ஆங்கிலத்தில் பேசுதல்
மற்றும் எழுதுதல் திறன் வளர்ப்பு பயிற்சியின் கீழ், இனிமையான கற்றல் சூழல்
கொண்டு வருதல், சிந்தித்தல், நினைவாற்றல், உருவாக்குதல், முடிவெடுக்கும்
பண்பு, ஆராய்ந்து அறிதல், குழு மனப்பான்மையை வளர்த்தல், ஒருங்கிணைத்தல்,
தொடர்புபடுத்துதல் போன்ற பல வகையான செயல்பாடுகளை பயன்படுத்தி எழுதும் திறன்
வளர்த்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசிரியர் பயிற்றுநர்கள் சாந்தா,
வரதராஜன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பெரம்பலூர்
யூனியனுக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் நடுநிலை, உயர்நிலை,
மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த ஆங்கில ஆசிரியர்கள், 6,7 மற்றும் 8ம் வகுப்பு
ஆசிரியர்கள் என மொத்தம் 84 பேர் பங்கேற்றனர்.


