Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சிறுமியை கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது விரைவு கோர்ட்

சிறுமியை கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது விரைவு கோர்ட்

சிறுமியை கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது விரைவு கோர்ட்

சிறுமியை கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது விரைவு கோர்ட்

ADDED : ஆக 09, 2011 02:28 AM


Google News

பூந்தமல்லி : வாய்பேச முடியாத சிறுமியைக் கடத்தி, பாலியல் சில்மிஷம் மற்றும் கொலை செய்த காமக் கொடூரனுக்கு, ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, பூந்தமல்லி விரைவு கோர்ட் பரபரப்பான தீர்ப்பளித்தது.கொரட்டூர், மாதனங்குப்பம், சேதுபாஸ்கர நகரில் குழந்தைகள் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது.

இக்காப்பக கட்டுமானப் பணியை, கட்டட கான்டிராக்டர் அண்ணாதுரை செய்து வருகிறார்.இங்கு காவலாளியாகப் பணிபுரிந்த, திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன், குடித்துவிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில், வீண் தகராறு செய்து வந்தார்.இதையறிந்த கான்டிராக்டர் அண்ணாதுரை, ஜெயராமனை வேலையை விட்டுத் தூக்கிவிட்டு, மயிலாடுதுறையைச் சேர்ந்த எத்திராஜ்,50 என்பவரை காவலாளி வேலைக்கு சேர்த்துக் கொண்டார். அந்த இடத்தில் தங்கி, எத்திராஜ் காவலாளியாகவும், அவரது மனைவி செல்வி,45 சித்தாள் வேலையும் செய்து வந்தனர். இவர்களுக்கு, ஆறு வயதில் கவுரி என்ற மகள் உண்டு.ஜெயராமனுக்கும்,48, எத்திராஜுக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக, 2010ம் ஆண்டு, ஜூன் 19ம் தேதி, குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த எத்திராஜ் வீட்டிற்குள் புகுந்து, சிறுமி கவுரியை ஜெயராமன் கடத்திச் சென்றார். காலையில் மகளைக் காணாததால், பல இடங்களில் தேடியும் கிடைக்காமல், கண்டுபிடித்துத் தரும்படி போலீசில் எத்திராஜ் புகார் செய்தார்.



இந்நிலையில், கொரட்டூர் ஏரிக்கரையில், உடல் சிதைந்த நிலையில் சிறுமியின் பிணம் கிடப்பதாக, போலீசுக்கு தகவல் வந்தது. சிறுமியின் அங்க அடையாளம் சரிபார்க்கப்பட்டதில், இறந்தது கவுரி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.கொரட்டூர் போலீசார் கொலை வழக்கு பதிந்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். சந்தேகத்தின்பேரில் ஜெயராமனை பிடித்து விசாரித்ததில், முன்விரோதம் காரணமாக, எத்திராஜின் மகள் கவுரியை கடத்தி, பாலியல் சில்மிஷம் செய்து, கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.இக்கொலை வழக்கு, பூந்தமல்லி முதல் விரைவு கோர்ட்டில், விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீனதயாளன், சிறுமியைக் கடத்தி, பாலியல் சில்மிஷம்; கழுத்தை நெரித்துக் கொலை செய்த ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கில், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் தியாகராஜன் ஆஜரானார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us