/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஆக 09, 2011 02:29 AM
தென்காசி : தென்காசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் சலுகைகளை பெறும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஆஸ்பத்திரிகள் மூலம் இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. கல்வி, கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, பஸ், ரயில் பயணத்தில் சலுகை கட்டணம் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கும் இந்த அடையாள அட்டை பயன்படுகிறது.இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் வகையில் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. நேற்று இம்முகாம் மூலம் 200 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாம் நாளை (10ம் தேதி) வரை நடக்கிறது.டாக்டர்கள் ஜெஸ்லின், மாரிமுத்து, பாபுசங்கர், செல்வரங்கராஜூ மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கினர்.


