ADDED : ஆக 12, 2011 11:39 PM
கோத்தகிரி : கோத்தகிரி கிரீன்வேலி பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தாலுகா அளவிலான வினாடி வினா போட்டி நடந்தது.
இதில், கெராடாமட்டம் அரசு பள்ளி, புனித அந்தோணியர் நடுநிலைப்பள்ளி, புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கேர்கம்பை அரசு உயர்நிலைப்பள்ளி, பாண்டியராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை ஹோம்ஸ் மெட்ரிக் பள்ளி, விஸ்வசாந்தி மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவியர் முதல் இரண்டு இடங்களில் வெற்றிபெற்று, இம்மாத இறுதியில் ஊட்டியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஊட்டி தாலுகா அளவில் லவ்டேல் புனித அந்தோணியார் பள்ளி, ஊட்டி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தக்கர்பாபா பள்ளி, அகலார் குருகுலம் பள்ளி மாணவ, மாணவியரும் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பெள்ளி தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.


