UPDATED : ஆக 14, 2011 06:56 PM
ADDED : ஆக 14, 2011 06:27 PM
புதுடில்லி: என் மீதான ஊழல் புகாரை அரசு நிருபிக்க வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
மேலும் அவர், என் மீதான களங்கம் தீரும் வரை போராட்டம் தொடரும். என் மீதான புகார்களுக்கு ஆதாரமில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. எங்களுக்கு நிதியுதவி அளிப்பவர்கள் பற்றிய விபரங்கள் 24 மணி நேரத்தில் வெளியிடப்படும். எங்களுக்கு நிதியுதவி அளிப்பவர்கள் தங்களை பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி தங்களுக்கு கிடைக்கும் நிதியுதவி பற்றியும் வெளியிட வேண்டும். முதலில் எங்களது குழுவில் உள்ளவர்களை அரசு குறி வைத்திருந்தது. தற்போது எனது மீதும் குறி வைக்கிறது.லோக்பால் மசோதா வலியுறுத்தி போராட்டம் தொடரும். உண்ணாவிரதத்திற்கு பல இடங்களை கேட்ட போதும் போலீசார் மறுத்து விட்டனர். போலீசார் தலையிட்டாலும் எங்களது போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என கூறினார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சி, அன்னா ஹசாரே தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த நீதிபதியின் அறிக்கையினை இதுவரை படிக்கவில்லை.காங்கிரஸ் கட்சியின் நிதி குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.