"சிக்கன நடவடிக்கையால் வீண் செலவுகள் குறையும்'
"சிக்கன நடவடிக்கையால் வீண் செலவுகள் குறையும்'
"சிக்கன நடவடிக்கையால் வீண் செலவுகள் குறையும்'
ADDED : ஜூலை 14, 2011 02:17 AM

புதுடில்லி : ''வெளிநாட்டு சுற்றுப் பயணங்களைக் குறைத்துக் கொள்வது போன்ற சிக்கன நடவடிக்கைகளால், அரசின் வீண் செலவுகளை குறைக்க முடியும்,'' என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 11ம் தேதி, மத்திய நிதியமைச்சகம், அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ''ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அரசு சார்பில், கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்'' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நேற்று விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ''சில வீணான செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்பதில், நான் உறுதியாக உள்ளேன். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டன. அவை நல்ல பலனை தந்தன'' என்றார். கடந்த, 2009ல், மத்திய அரசு சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


