/உள்ளூர் செய்திகள்/சேலம்/எவர்சில்வர் பொருட்களை சந்தைப்படுத்த கருத்தரங்கம்எவர்சில்வர் பொருட்களை சந்தைப்படுத்த கருத்தரங்கம்
எவர்சில்வர் பொருட்களை சந்தைப்படுத்த கருத்தரங்கம்
எவர்சில்வர் பொருட்களை சந்தைப்படுத்த கருத்தரங்கம்
எவர்சில்வர் பொருட்களை சந்தைப்படுத்த கருத்தரங்கம்
ADDED : ஜூலை 31, 2011 01:31 AM
சேலம்: சேலம், சோனா தொழில்நுட்ப கல்லூரியில், 'எவர்சில்வர் பொருட்களை ஏற்றுமதி செய்தல்' தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
தமிழக சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் தங்கராஜ் கருத்தரங்கை துவக்கி வைத்து, சிறு தொழிற்சாலைகளுக்கான சந்தை வாய்ப்பு, அதற்கான சலுகைகள் பெறுவது குறித்து விளக்கினார்.ஜெர்மன் நாட்டின், தமிழ்நாடு சேவை நிறுவனமான டி.எஸ்.எப்.சி., என்ற அமைப்பின் தலைவர் தனபால், சிறு தொழிற்சாலைகளுக்கு திட்ட அறிக்கை தயார் செய்தல், நலிவுற்ற தொழிற்சாலைகளை மீண்டும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், சேவைகள் குறித்து பேசினார்.இரும்புத்துறை ஆணையத்தின் பன்னாட்டு வர்த்தகத்தின் துணை பொது மேலாளர் சாந்தாராவ், எவர்சில்வர் பொருட்களை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்பது பற்றியும், உருக்காலை துணை பொது மேலாளர் ஜெயந்தி, எவர்சில்வர் தகடுகளை கொண்டு துவக்கப்படும் சிறு தொழிற்சாலைகளுக்கான உதவிகள் பற்றியும் பேசினர்.சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அழகாபுரம் மோகன்ராஜ் பேசியதாவது:திருச்சி பாய்லர் தொழிற்சாலை, ஆயிரக்கணக்கான சிறு தொழிற்சாலைகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. அதேபோல, சேலம் உருக்காலை மூலம் நூற்றுக்கணக்கான சிறு தொழிற்சாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும்.இது தொடர்பாக, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிட உள்ளேன். எவர்சில்வர் பொருட்களை தயாரிக்க, தனியாக ஒரு தொழிற்பேட்டையை அமைக்க முதல்வரிடம் வலியுறுத்துவேன்.இவ்வாறு அவர் பேசினார்.சிறு, குறு தொழிற்சாலைகள் சங்க மாநில பொது செயலாளர் ஜெயவேலன், விஜயலட்சுமி, நிர்வாகிகள் ராஜமாணிக்கம், கார்மேகம், ராம்நாத், சின்னக்கண்ணு, இளங்கோவன், யோகநாதன், சின்னசாமி, மாணிக்கம், சந்திரன் உள்பட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.


