/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பூலாங்குடியிருப்பு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்பூலாங்குடியிருப்பு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
பூலாங்குடியிருப்பு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
பூலாங்குடியிருப்பு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
பூலாங்குடியிருப்பு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : செப் 16, 2011 01:39 AM
தென்காசி : பூலாங்குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
பூலாங்குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. செங்கோட்டை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் லில்லிமேரி பியாட்ரஸ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானசுந்தரம் தலைமை வகித்து கல்வி உபகரணங்களை வழங்கினர். புதூர் டவுன் பஞ்.,தலைவர் செல்வி, துணைத் தலைவர் திவான், கவுன்சிலர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மெட்டில்டா, ஜெனட் ரோஸ்லின், ஆசிரியர்கள் கிறிஸ்டி ஜெயசிங், லட்சுமி, விஜயலட்சுமி, விஜயா, அருணாசலம், செல்வி, வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் சேவியர் அலெக்ஸாண்டிரியா, தெற்குமேடு அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆல்பர்ட் செல்வின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் வண்ணமுத்து நன்றி கூறினார். ஏற்பாடுகளை சிறப்பு பயிற்சி மைய பயிற்சியாளர் வாணி செய்திருந்தார்.


