ADDED : ஆக 21, 2011 11:53 PM
குறிச்சி : ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை
சார்பில், புகைப்பட கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, புகைப்பட கண்காட்சி
மற்றும் போட்டி நடந்தது.கோவைபொள்ளாச்சி ரோட்டிலுள்ள கல்லூரி வளாகத்தில்
நடந்த கண்காட்சியில், கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேசன் துறை மாணவர்களின்
230 படைப்புகள், காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
கல்லூரிகளுக்கு இடையேயான
புகைப்பட போட்டியில், எட்டு கல்லூரிகளை சேர்ந்த 60 பேர் பங்கேற்றனர்.
'லைட் அண்ட் ஷேடு' எனும் தலைப்பில் நடந்த போட்டியில், ரத்தினம் கல்லூரியின்
அருண், பிஷப் அப்பாசாமி கல்லூரியின் வினோத்குமார், ஜி.ஆர்.டி.,
கல்லூரியின் அனுஷா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
'ஸ்ட்ரீட் போர்ட் ரைட்' எனும் தலைப்பில் நடந்த பிரிவில், டி.ஜெ., அகாடமி
கல்லூரியின் சோனியாபேடி, பிஷப் அப்பாசாமி கல்லூரியின் முகிலன், ரத்தினம்
கல்லூரியின் லட்சுமணன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி தலைவர் மதன்செந்தில் தலைமை
வகித்தார். கல்லூரி முதல்வர் முருகேசன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வழங்கினார். ஏற்பாடுகளை, விஷுவல் கம்யூனிகேசன் துறைத்தலைவர் பிரபு மற்றும்
பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


