/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விபத்தில் சிக்கி உதவிக்கு ஏங்கிய குடும்பம்: மனிதாபிமானம் எங்கேவிபத்தில் சிக்கி உதவிக்கு ஏங்கிய குடும்பம்: மனிதாபிமானம் எங்கே
விபத்தில் சிக்கி உதவிக்கு ஏங்கிய குடும்பம்: மனிதாபிமானம் எங்கே
விபத்தில் சிக்கி உதவிக்கு ஏங்கிய குடும்பம்: மனிதாபிமானம் எங்கே
விபத்தில் சிக்கி உதவிக்கு ஏங்கிய குடும்பம்: மனிதாபிமானம் எங்கே
ADDED : செப் 04, 2011 09:43 PM
தாண்டிக்குடி:கொடைக்கானல் மலைப்பகுதியில் ரோட்டில் வேன்
விபத்துக்குள்ளானது. அந்த வழியே வாகனங்களில் சென்ற ஒருவர் கூட ஒரு மணி
நேரமாக உதவிக்கு வரவில்லை, என பாதிக்கப்பட்டவர்கள் கண்கலங்கினர். தஞ்சாவூரை
சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோபிநாத். இவர்,
குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று விட்டு, நேற்று மாலை டிராவலர் வேனில்
திரும்பிக் கொண்டிருந்தார். வேனில் 14 பேர் பயணித்தனர். டிரைவர் சுந்தர்,
36, ஓட்டிவந்தார். கொடைக்கானல் மலைப்பகுதி நண்டாங்கரை அருகே வேன் வந்தபோது,
நிலைதடுமாறி ரோட்டோரம் கவிழ்ந்தது. இதில், கோபிநாத் மனைவி உஷாராணிபாய்,
50, லாவண்யா, 5, பலத்த காயமடைந்தனர்.
மற்றவர்களுக்கு லேசான காயம்
ஏற்பட்டது. வத்தலக்குண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து கோபிநாத் கூறுகையில், ''விபத்து நடந்தபோது பலத்த மழை
பெய்தது.அந்த நிலையில், ஒரு மணி நேரமாக வாகனங்களில் அந்தவழியே சென்றவர்கள்,
மனிதாபிமானமின்றி பார்த்து விட்டு மட்டும் சென்றனர். ஒருவர் கூட விபத்தில்
சிக்கிய எங்களுக்கு உதவ வரவில்லை. அடிபட்ட காயத்தைவிட, மனிதாபிமானம்
இல்லாத மக்களை கண்டது, மிகவேதனையாக இருந்தது,'' என
கண்கலங்கினார்.தாண்டிக்குடி போலீசார் வேறு வாகனம் ஏற்பாடு, செய்து ஊர்
திரும்ப உதவினர்.


