ADDED : செப் 07, 2011 12:38 AM
உடுமலை : உடுமலை நகரப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட
பூங்கா பராமரிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் துவங்கி
தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
முதற்கட்டமாக நடைபாதைகளில்
காணப்பட்ட குப்பைகள் மற்றும் இருக்கைகள் அருகில் இருந்த முட்செடிகள்
அகற்றப்பட்டன. பழுதடைந்த பூங்காவிலுள்ள 'கேட்' செயற்கை நீருற்று
அமைக்கப்பட்டிருந்த பராமரிப்பில்லாத தொட்டிகள் புதுப்பிக்கப்பட்டன.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அண்ணா பூங்காவில், பராமரிப்பு பணிகள் 3
லட்சம் ரூபாய் செலவில் நடந்து வருகிறது. பழுதடைந்த தண்ணீர் தொட்டி, செயற்கை
நீருற்றுகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் பராமரிப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டது. பூங்காவை அழகுபடுத்த புற்கள் அமைத்தல் உள்ளிட்ட
பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூங்கா புதுப்பிக்கப்பட்டு, விரைவில்
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றனர்.


