/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கல்விக்கடன் வழங்க கோரி 3,265 மாணவ, மாணவியர் மனுகல்விக்கடன் வழங்க கோரி 3,265 மாணவ, மாணவியர் மனு
கல்விக்கடன் வழங்க கோரி 3,265 மாணவ, மாணவியர் மனு
கல்விக்கடன் வழங்க கோரி 3,265 மாணவ, மாணவியர் மனு
கல்விக்கடன் வழங்க கோரி 3,265 மாணவ, மாணவியர் மனு
ADDED : செப் 07, 2011 01:57 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட, கல்விக்கடன் மேளா நிகழ்ச்சியில், 3,265 மாணவ, மாணவியர், கல்விக் கடன் வழங்கக் கோரி, மனு கொடுத்துள்ளனர்.கடந்தாண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் தொகை, 39 லட்சத்து, 90 ஆயிரம்.
அதற்கேற்ப, தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளது.வறுமை காரணமாக, ஏழைப் பெற்றோர், குழந்தைகளின் தொழிற் கல்விக்கான, கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்காக, வங்கிகளை இணைத்து கல்விக்கடன் மேளா நடத்த, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 22ம் தேதி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தில், 23ம் தேதி, திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில், 24ம் தேதி, மதுராந்தகம் ஒன்றிய அலுவலகத்தில், 25ம் தேதி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், 26ம் தேதி, சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தில், 29ம் தேதி, உத்திரமேரூர் ஒன்றிய அலுவலகத்தில், 30ம் தேதி, கல்விக்கடன் மேளா நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட வங்கிகள் பங்கேற்றன. காஞ்சிபுரத்தில், 662 பேர், ஸ்ரீபெரும்புதூரில், 208 பேர், திருப்போரூரில், 505 பேர், மதுராந்தகத்தில், 450 பேர், காட்டாங்கொளத்தூரில், 440 பேர், உத்திரமேரூர் மற்றும் சித்தாமூரில் தலா 500 பேர், என மொத்தம் 3,265 பேர் கல்விக்கடன் வழங்கக் கோரி மனு செய்தனர். அவர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன் கூறும்போது, ''கல்விக் கடன் மேளா நிகழ்ச்சிக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். அவர்களின் மனுக்கள், வங்கிகளின் பரிசீலனையில் உள்ளன. அனைவருக்கும் இம்மாதம் இறுதிக்குள், கடன் வழங்கும்படி கூறியுள்ளோம். இம்மாதம் நடைபெறும் வங்கி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், எத்தனை பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டது, என்பது குறித்து, ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து, மனுக்கள் மீதான நடவடிக்கையை, மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கும். கல்விக்கடன் மேளா நிகழ்ச்சியில், பங்கேற்க முடியாத மாணவர்கள், நேரடியாக சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளை அணுகலாம்,'' என்றார்.


