UPDATED : செப் 08, 2011 12:43 AM
ADDED : செப் 07, 2011 11:42 PM
புதுடில்லி: டில்லியில் நேற்று இரவு 11.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டில்லி முழுமையும் உணரப்பட்டது. நிலநடுக்கம் டில்லி மற்றும் அரியானா மாநில எல்லையில் உள்ள சோனாபட் என்ற இடத்தை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நொய்டா, கூர்கான், காசியாபாத் மற்றும் பரிதாபாத் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் வட கிழக்கு இந்தியாவி்ன் ஒரு சில பகுதிகளிலும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 10 நிமிடங்கள் நீடித்ததாகவும், சேதம் குறித்துஇதுவரை தகவல் இல்லை என்று அதிகாரி ஒருவர் கூறினார்.


