/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எரிவாயு மயான ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்எரிவாயு மயான ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்
எரிவாயு மயான ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்
எரிவாயு மயான ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்
எரிவாயு மயான ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்
ADDED : செப் 08, 2011 02:15 AM
உடுமலை : நவீன எரிவாயு மயானத்தில், பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்,' என உடுமலை மக்கள் பேரவையினர் டி.எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர்.
உடுமலையில் நவீன எரிவாயு மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், அசம்பாவிதங்கள் நடந்து வருவதாக கூறி, உடுமலை மக்கள் பேரவையினர் நேற்று டி.எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர். இது குறித்து பேரவையினர் கூறியதாவது: உடுமலையில், தொழிலதிபர் கெங்குசாமி தலைமையில் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள், பலரின் நன்கொடையின் மூலமாக 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் 'நவீன எரிவாயு மயானம்' அமைக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதமாக சில வேண்டாத நபர்களால், விரும்பத்தகாத செயல்கள் செய்யப்பட்டு வருகின்றன. நவீன எரிவாயு மயானத்திற்கு இறந்தவர்கள் உடலை எடுத்து வரும் ஊர்தியின் சில பகுதிகளை உடைத்தும், ஊர்தியின் ஓட்டுநரை அடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மயானத்தில் எரியூட்டும் போது, தகராறு ஏற்பட்டு, ஊழியர்களை தாக்கி காயம் படுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. நவீன எரிவாயு மயானத்தை பயன்படுத்துவோருக்கு 19 விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழிமுறைகளை மதிக்காமல், சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது குறித்து உடுமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க கோரி கடந்த வாரம் ஆக., 31 மற்றும் செப்.,1ம் தேதி இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை புகார் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில், தொடரும் இந்த மாதிரியான சம்பவங்களால் ஊழியர்கள் உயிருக்கும், அமைப்பின் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதால், பணியாளர்கள் வர தயக்கம் காட்டி வருகின்றனர்.அதனால் நவீன எரிவாயு மயானமே இயங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஏற்கனவே நாங்கள் கொடுத்திருக்கும் புகார் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து டி.எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளோம்,' என்றனர்.


