போலி உரக்கடைக்கு சீல்: ஒருவர் கைது
போலி உரக்கடைக்கு சீல்: ஒருவர் கைது
போலி உரக்கடைக்கு சீல்: ஒருவர் கைது
UPDATED : செப் 08, 2011 08:47 PM
ADDED : செப் 08, 2011 08:43 PM
மதுரை: மதுரை அருகே போலி உரக்கடை நடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் அனந்தப்பன். இவர் மானிய விலையில் யூரியா உரத்தை வாங்கி அதனுடன், அகர் அகர் பாசி மற்றும் கரித்தூள் சேர்த்து குருணை தழைச்சத்து என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து அவரது கடையில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் அனந்தப்பனை கைது செய்தனர். கடையில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஆயிரம் மூட்டை போலி உரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரக்கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது.


