/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மதுராந்தகத்தில் அ.தி.மு.க.,வினர் மனுதாக்கல்மதுராந்தகத்தில் அ.தி.மு.க.,வினர் மனுதாக்கல்
மதுராந்தகத்தில் அ.தி.மு.க.,வினர் மனுதாக்கல்
மதுராந்தகத்தில் அ.தி.மு.க.,வினர் மனுதாக்கல்
மதுராந்தகத்தில் அ.தி.மு.க.,வினர் மனுதாக்கல்
ADDED : செப் 27, 2011 11:26 PM
மதுராந்தகம் : மதுராந்தகம் நகராட்சியில் நேற்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.
மதுராந்தகம் நகராட்சி தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில் நகரச் செயலர் ரவி போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை ஏரிகாத்த ராமர் கோவிலுக்கு சென்று வணங்கினார். பின்னர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக, நகராட்சி அலுவலகம் சென்று மனுத்தாக்கல் செய்தார்.
அவருடன் முதலாவது வார்டுக்கு தங்கப்பன், இரண்டாவது வார்டுக்கு செல்வி, மூன்றாவது வார்டுக்கு ராமன், நான்காவது வார்டுக்கு பவானி, ஐந்தாவது வார்டுக்கு கிருஷ்ணன், ஆறாவது வார்டுக்கு ஜாய்சன், ஏழாவது வார்டுக்கு காதர்மொய்தீன், 11வது வார்டுக்கு பாபு, 12வது வார்டுக்கு காஞ்சனா, 15வது வார்டுக்கு லட்சுமிபதி, 16வது வார்டுக்கு கோவிந்தன், 17வது வார்டுக்கு ராதா, 19வது வார்டுக்கு பொன்னையன், 20வது வார்டுக்கு தங்கம், 21வது வார்டுக்கு ரவி, 23வது வார்டுக்கு சேகர், 24வது வார்டுக்கு செல்வகுமார், ஆகியோர் நேற்று அ.தி.மு.க., சார்பில், மனுதாக்கல் செய்தனர்.


