/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/உள்ளாட்சிமன்ற தேர்தல் வழிமுறை: அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்உள்ளாட்சிமன்ற தேர்தல் வழிமுறை: அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சிமன்ற தேர்தல் வழிமுறை: அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சிமன்ற தேர்தல் வழிமுறை: அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சிமன்ற தேர்தல் வழிமுறை: அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 14, 2011 12:10 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சிமன்ற
தேர்தலை சந்திப்பதற்கான வழிமுறை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட
அவைத் தலைவர் ரெத்தினசபாபதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமையா,
எம்.எல்.ஏ.,க்கள் வைரமுத்து, விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன், செல்வநாயகம்,
முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன்,
முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ராமசாமி, செல்லத்துரை, குணசேகரன், நகரச்
செயலாளர் பாஸ்கர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தை
துவக்கிவைத்து அ.தி.மு.க., எம்.பி., குமார் பேசியதாவது: சட்டசபைத்
தேர்தலில் அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்றுள்ளது. புதுக்கோட்டை
மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளையும் அ.தி.மு.க., கூட்டணி
கைப்பற்றியுள்ளது. இதே வெற்றி எதிர்வரும் உள்ளாட்சிமன்ற தேர்தலிலும் தொடர
வேண்டும். இதற்காக கட்சிப் பணிகளில் தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களும்
முழு ஈடுபாட்டுடன் களம்காண தயாராக வேண்டும். முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் தகுதியுடைய அனைத்துதரப்பு மக்களையும்
சென்றடைவதற்கான வழிவகைகளை கட்சி நிர்வாகிகள் துவக்க வேண்டும். இதுபோன்று
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை நிறைவேற்றி
கொடுப்பதிலும் கட்சி நிர்வாகிகள் அதிக ஆர்வம் செலுத்தவேண்டும். இம்மாவட்ட
விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்துவரும் கொள்ளிடம் உபரிநீரை
புதுக்கோட்டை மாவட்ட விவசாயப் பணிகளுக்கு திருப்பி விடுவதற்கான
நடவடிக்கைகளை எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் துவக்க
வேண்டும். இதுபோன்ற தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்கள் மூலம் தான்
புதுக்கோட்டை மாவட்டத்தை அ.தி.மு.க.,வின் நிரந்தர கோட்டையாக மாற்ற
முடியும். இதற்கு தொகுதி எம்.பி., என்பதால் நானும் உதவ தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.


