Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/மினி பஸ் மோதி வாலிபர் பலியால் ரகளைபுதுகை அருகே பெண் போலீஸ் காயம்

மினி பஸ் மோதி வாலிபர் பலியால் ரகளைபுதுகை அருகே பெண் போலீஸ் காயம்

மினி பஸ் மோதி வாலிபர் பலியால் ரகளைபுதுகை அருகே பெண் போலீஸ் காயம்

மினி பஸ் மோதி வாலிபர் பலியால் ரகளைபுதுகை அருகே பெண் போலீஸ் காயம்

ADDED : அக் 05, 2011 12:47 AM


Google News
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மினி பஸ் மோதி டூவீலரில் சென்ற வாலிபர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதியினர் கல்வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதில் பஸ் சேதமடைந்ததோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ் ஒருவரும் பலத்த காயமடைந்தார்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த கணியான்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா. இவரது மகன் பாண்டி(35). இவர் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு வழக்கம் போல் தனது ஹோண்டா டூவீலரில் கறம்பக்குடி கடைவீதிக்கு சென்றுள்ளார்.பின்னர் வீடு திரும்புவதற்காக சீனிக்கடை முக்கம் அருகே சென்றபோது எதிரே ஆவணத்திலிருந்து கறம்பக்குடிக்கு வந்துகொண்டிருந்த மினி பஸ்(வி.ஏ.ஏ.,) இவர் மீது மோதியது. இதில், பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்தைத் தொடர்ந்து மினி பஸ் டிரைவர் உடையாலிப்பட்டியைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் சுரேஷ்குமார்(27) தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் சுரேஷ்குமாரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.இதற்கிடையே விபத்தில் இறந்த பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் கல் வீசி ரகளையில் ஈடுபட்டனர்.இதில் பஸ்ஸின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கறம்பக்குடி பெண் போலீஸ் அன்பரசி(25) தலையில் கல் விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை சக போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து கறம்பக்குடி ஜங்ஷன் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பெரும்பரபரப்புக்கு உள்ளானது.விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கறம்பக்குடி போலீஸார் தலைமறைவாக இருந்த மினி பஸ் டிரைவர் சுரேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us