Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கடன் திட்டங்களை மறுசீரமைக்க வலியுறுத்தல் :ரிசர்வ் வங்கி கவர்னருக்கு "டீ' சங்கம் கடிதம்

கடன் திட்டங்களை மறுசீரமைக்க வலியுறுத்தல் :ரிசர்வ் வங்கி கவர்னருக்கு "டீ' சங்கம் கடிதம்

கடன் திட்டங்களை மறுசீரமைக்க வலியுறுத்தல் :ரிசர்வ் வங்கி கவர்னருக்கு "டீ' சங்கம் கடிதம்

கடன் திட்டங்களை மறுசீரமைக்க வலியுறுத்தல் :ரிசர்வ் வங்கி கவர்னருக்கு "டீ' சங்கம் கடிதம்

ADDED : செப் 07, 2011 12:45 AM


Google News
திருப்பூர் : 'சாயத்தொழில் முடங்கியுள்ளதால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

மத்திய ரிசர்வ் வங்கி, கடன் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்,' என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க (டீ) தலைவர் சக்திவேல் அனுப்பியுள்ள கடிதம்:நாட்டின் பணவீக்கத்தை குறைக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நிதி சீரமைப்புகளை செய்தது. மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக, வங்கி கடன் மீதான வட்டி விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டன. நாட்டின் பணவீக்க விகிதம் குறைவது எப்படியிருந்தாலும், வங்கிகளை சார்ந்துள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.திருப்பூரில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், வங்கி கடன் அடிப்படையிலேயே ஆர்டர்களை எடுத்து தொழில் நடத்துகின்றனர். கடந்த எட்டு மாதங்களாக சாயத்தொழில் முடங்கியுள்ளதால், உற்பத்தியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், நடப்பு நிதியாண்டில் வங்கி கடன் மற்றும் வட்டி விகிதங்களை சரியாக செலுத்த முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.சாயத்தொழில் பிரச்னையால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆர்டர்களையும் நம்பிக்கையுடன் எடுத்து உற்பத்தி செய்ய இயலவில்லை. இத்தகைய நெருடல்களால், ஒவ்வொரு ஏற்றுமதியாளரும், உற்பத்தியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், வட்டி விகிதங்களை உயர்த்தியது, தொழில் துறையினரை மேலும் துன்பத்தில் தள்ளியுள்ளது. வங்கி கடனை சரிவர செலுத்த முடியாததால், 'சர்பேஷி' சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை உணர்ந்து, ஏற்றுமதியாளர்களின் வங்கி கடன் திட்டங்களை மத்திய ரிசர்வ் வங்கி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். குறிப்பாக, ஏற்றுமதியாளர்களின் வங்கி கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியால், தொழில் துறையினர் சிக்கியுள்ளதால், நடப்பு நிதியாண்டுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக, வங்கிகளின் தலைவர்களுக்குஇத்தகைய கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே பொருளாதார இடர்பாடுகளில் இருந்து பின்னலாடை தொழில் தப்பிக்கும், என்று தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us