/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/புதிய சட்ட சமாதான மையங்கள் திறப்பு :சென்னை ஐகோர்ட் நீதிபதி தகவல்புதிய சட்ட சமாதான மையங்கள் திறப்பு :சென்னை ஐகோர்ட் நீதிபதி தகவல்
புதிய சட்ட சமாதான மையங்கள் திறப்பு :சென்னை ஐகோர்ட் நீதிபதி தகவல்
புதிய சட்ட சமாதான மையங்கள் திறப்பு :சென்னை ஐகோர்ட் நீதிபதி தகவல்
புதிய சட்ட சமாதான மையங்கள் திறப்பு :சென்னை ஐகோர்ட் நீதிபதி தகவல்
ADDED : ஆக 01, 2011 11:52 PM
குன்னூர் : 'தமிழகத்தில் 66 சட்ட சமாதான மையங்கள் திறக்கப்பட்டுள்ளன,' என
தெரிவிக்கப்பட்டது.தமிழ்நாடு சட்ட உதவி ஆணையம், நீலகிரி மாவட்ட சட்ட
ஆணையம், குன்னூர் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட சமாதான
மைய துவக்க விழா மற்றும் குன்னூர் இந்தியன் வங்கியில் நிலுவையில் உள்ள
கடன் தொகை வசூலிப்பு முகாம் நடத்தப்பட்டது.
குன்னூர் கோர்ட்டில் நடந்த
விழாவில், மாவட்ட நீதிபதி பிரேம்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு
விருந்தினராக பங்கேற்று சட்ட சமாதான மையத்தை திறந்து வைத்து, சென்னை
ஐகோர்ட் நீதிபதி எலிபி தர்மாராவ் பேசுகையில், ''தமிழகத்தில் கடந்த 1997,
நவ.,1ம் தேதி முதல் கடந்த மே 31ம் தேதி வரை, மொத்தம் 45 ஆயிரத்து 543 இலவச
சட்ட உதவி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன; 52 ஆயிரத்து ஆறு லோக் அதாலத்
நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், 8 லட்சத்து 94 ஆயிரத்து 268 மனுக்கள்
பெறப்பட்டு, மோட்ட வாகன விபத்து இழப்பீடு, வங்கி கடன் வசூலிப்பு உட்பட
பல்வேறு வழக்குகளின் கீழ் மொத்தம் 2,312 கோடியே ஒரு லட்சத்து 52 ஆயிரத்து
562 ரூபாய் 'செட்டில்மென்ட்' தொகையாக பரிமாறப்பட்டுள்ளது. மாநிலத்தில் 66
சட்ட சமாதான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார். குன்னூர்
மாஜிஸ்திரேட் ராமநாதன், குன்னூர் வக்கீல் சங்க தலைவர் பலராமன், செயலர் பாபு
பேசினர். ஊட்டி சார்பு நீதிபதி நாராயணசாமி நன்றி கூறினார்.கடன் நிலுவை
வசூலிப்புகுன்னூரில் நடந்த கடன் தொகை வசூலிப்பு சிறப்பு மக்கள்
நீதிமன்றத்தில், கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல், நீதிமன்ற வழக்கு வரை
சென்ற 187 பேரிடம் கடன் வசூலிப்பு பேச்சு வார்த்தை நடந்தது. இதில், 71 பேர்
கடன் தொகையை திருப்பி செலுத்த ஒப்புக் கொண்டதன், மூலம் மொத்தம் 46.97
லட்சம் ரூபாய் கடன் நிலுவைத் தொகை திரும்ப கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
முகாமன்று, 10.37 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது.


