/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பராமரிப்பின்றி இடிந்தது கழிப்பறை: அரசு நிதி வீண்பராமரிப்பின்றி இடிந்தது கழிப்பறை: அரசு நிதி வீண்
பராமரிப்பின்றி இடிந்தது கழிப்பறை: அரசு நிதி வீண்
பராமரிப்பின்றி இடிந்தது கழிப்பறை: அரசு நிதி வீண்
பராமரிப்பின்றி இடிந்தது கழிப்பறை: அரசு நிதி வீண்
ADDED : ஆக 26, 2011 11:22 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே ஆணைசேரியில் பல லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட கழிப்பிடம் பராமரிப்பின்றி இடிந்து விழுந்தது.கிராம பகுதிகளில் முழு சுகாதார திட்டத்தின் கீழ் முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைசேரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
கருவேல மரங்களால் சூழப்பட்ட இடத்தில் உள்ள கழிப்பிடத்தை பாதுகாப்பு கருதி பொதுமக்கள் பயன்படுத்தவில்லை. பல ஆண்டுகளாக பயன்படுத்தபடாமல் இருந்த கழிப்பிடம் சேதமடைந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்த பெய்த மழைக்கு இடிந்து விழுந்தது. இதனால் அரசு நிதி வீணானது. ஆணைசேரியில் முழு சுகாதாரத்திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது


