ADDED : செப் 02, 2011 11:58 PM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரசு கேபிள் 'டிவி', பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் நேற்று முதல் செயல்பட துவங்கியது.
கலெக்டர் நாகராஜன் தலைமை வகித்தார். சந்திரசேகரன் எஸ்.பி., எம்.எல்.ஏ., க்கள் பாலபாரதி, பழனிச்சாமி, வேணுகோபாலு, கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன், செயலாளர் பொ ன்னையா, பொருளாளர் காசி பங்கேற்றனர். அமைச்சர் விசுவநாதன், கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். இதன் மூலம் 42 ஆயிரம் இணை ப்புகளுக்கு, 90 சேனல்கள், மாதம் 70 ரூபாய் கட்டணத்தில் ஒளிபரப்பப்படுகிறது. முதற்கட்டமாக திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளில் ஒளிரபரப்பு தெரியும். மாவட்டத்தில் பிற ஊர்களுக்கும் இணைப்புகள் கொடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.அரசு கேபிள் 'டிவி' திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், கேபிள் ஆப்பரேட்டர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.


