/உள்ளூர் செய்திகள்/தேனி/அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம் கூடலூர் மக்கள் வரவேற்புஅரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம் கூடலூர் மக்கள் வரவேற்பு
அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம் கூடலூர் மக்கள் வரவேற்பு
அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம் கூடலூர் மக்கள் வரவேற்பு
அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம் கூடலூர் மக்கள் வரவேற்பு
தேனி : கூடலூரில் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும், தம் மீது கூறப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., கூறினார்.
இதை மறுத்த எம்.எல்.ஏ., கூறியதாவது: கூடலூர் நகராட்சி குப்பை கிடங்கு அமைப்பதற்காக, மணி ஆக்கிரமித்திருந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2005ல் இருந்தே இந்த நிலத்தை கையகப்படுத்தும் முயற்சி நடந்தது. காங்., முக்கிய பிரமுகர் ஒருவர் மணிக்கு ஆதரவாக செயல்பட்டதால் திட்டம் முடங்கியது. ஆக்கிரமிப்பில் இருந்த 5 ஏக்கர் நிலம், எனது முயற்சியால் மீட்கப்பட்டது. நிலத்தை மீட்க அரசுக்கு பரிந்துரை செய்ததால், என் மீது பழி சுமத்தி ஆதாரமற்ற புகார் தந்துள்ளார். இதற்காக மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால், பொதுமக்கள் வரவேற்று, அ.தி.மு.க., அரசை பாராட்டுகின்றனர்', இவ்வாறு அவர் கூறினார்.


