/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுகை தூய மரியன்னை பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று துவக்கம்புதுகை தூய மரியன்னை பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று துவக்கம்
புதுகை தூய மரியன்னை பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று துவக்கம்
புதுகை தூய மரியன்னை பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று துவக்கம்
புதுகை தூய மரியன்னை பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று துவக்கம்
ADDED : செப் 07, 2011 02:02 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மத்திய,
மாநில அரசுகளின் அறிவியல் புத்தாக்க விருதுக்கான இரண்டு நாள் அறிவியல்
கண்காட்சி இன்று (7ம் தேதி) ஆரம்பமாகிறது.
மாவட்ட அளவிலான இக்கண்காட்சியில்
மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான 400க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள்
காட்சிக்காக வைக்கப்படுகிறது. மாணவர்களிடையே அறிவியல் திறனை ஊக்குவிக்கும்
விதமாக ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள்
அறிவியல் புத்தாக்க விருது வழங்கி வருகிறது. 2010-11ம் ஆண்டுக்கான அறிவியல்
புத்தாக்க விருதுபெற தகுதியுடை அறிவியல் படைப்புகளை தேர்வு செய்யும்
விதமாக புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான
அறிவியல் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. இதன் துவக்க விழாவுக்கு சி.இ.ஓ.,
பரமசிவம் தலைமை வகிக்கிறார். டி.இ.ஓ., ராஜேந்திரன் வரவேற்கிறார். கண்காட்சி
அரங்கினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி திறந்து வைக்கிறார். மெட்ரிக் பள்ளி
ஆய்வாளர் குணசேகரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சாந்தகுமாரி, மாவட்ட
கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் வின்சென்ட் டீ பால் உட்பட
கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்க
உள்ளனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இக்கண்காட்சியில்
மாணவர்களின் தனித்திறன் மற்றும் கைவண்ணத்தில் உருவான 400க்கும் மேற்பட்ட
அறிவியல் படைப்புகள் இடம்பெறவுள்ளது. இதை ஏராளமான மாணவர்கள்
பார்வையிடுகின்றனர்.


