Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உலக அமைதிக்காக அன்னாபிஷேகம்

உலக அமைதிக்காக அன்னாபிஷேகம்

உலக அமைதிக்காக அன்னாபிஷேகம்

உலக அமைதிக்காக அன்னாபிஷேகம்

ADDED : ஜூலை 13, 2011 02:53 AM


Google News
பழநி : உலக அமைதி வேண்டி பழநி கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது.மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜையும், தங்கச்சப்பரத்தில் 12 கலசங்கள் வைத்து ஸ்கந்த மூல மந்திர யாகமும் நடந்தது.

புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர் சங்குகளில் நிரப்பப்பட்டிருந்தது. மூலவருக்கு சங்காபிஷேகம் நடந்தது. உச்சிக்காலத்தில் பழநி ஆண்டவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.கோயில் இணை கமிஷனர் ராஜா, துணை கமிஷனர் மங்கையற்கரசி, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, ஸ்தானீக மிராஸ் பண்டாரங்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன், பெரியாவுடையார் கோயில்களில், இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அன்னாபிஷேகம் நடக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us