/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/1.50 லட்சம் பேரை தேர்வு எழுத வைக்க "கற்கும் பாரதம்' முயற்சி1.50 லட்சம் பேரை தேர்வு எழுத வைக்க "கற்கும் பாரதம்' முயற்சி
1.50 லட்சம் பேரை தேர்வு எழுத வைக்க "கற்கும் பாரதம்' முயற்சி
1.50 லட்சம் பேரை தேர்வு எழுத வைக்க "கற்கும் பாரதம்' முயற்சி
1.50 லட்சம் பேரை தேர்வு எழுத வைக்க "கற்கும் பாரதம்' முயற்சி
ADDED : ஜூலை 26, 2011 01:38 AM
ஈரோடு: ''ஈரோடு மாவட்டத்தில், 'கற்கும் பாரதம்' திட்டத்தில், வரும் ஆகஸ்ட்டில் 1.50 லட்சம் பேரை தேர்வு எழுத வைக்க முயற்சி நடக்கிறது,'' என, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்ட இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறினார்.
ஈரோட்டில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், அவர் கூறியதாவது: கற்கும் பாரதத்தில் பயில்வோர் விபரம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் விழுப்புரத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் இந்த விபரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மார்ச் மாதம் தேர்வு எழுதிய 57 ஆயிரத்து 287 பேரில், 53 ஆயிரத்து 677 பேர் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள 2.75 லட்சம் பேர் தேர்வு எழுத வேண்டியுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி நடக்கும் தேர்வில் 52 ஆயிரம் பேர் தேர்வு எழுத இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 65 ஆயிரம் பேர் தேர்வு எழுத ஆயத்தப்படுத்தி உள்ளோம். இதுபற்றி கலெக்டர் காமராஜிடம் பேசிய போது, 'மாவட்டத்தில் கல்வியறிவு பெறாதவர்கள் மூன்று லட்சம் பேர் வரை உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து வரும் ஆகஸ்ட் தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்வு எழுத வேண்டும். அடுத்த மார்ச்சில் மீதமுள்ள 1.50 லட்சம் பேரை தேர்வு எழுத வைக்க வேண்டும். இதன் மூலம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாவட்டமாக்க வேண்டும்' என, அவர் தெரிவித்தார். அதற்கேற்ப நாமும் பணிகளை துவக்கி, 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதச் செய்வோம். கிராமங்களில் உள்ள கல்லூரி, என்.எஸ்.எஸ்., மாணவர்கள், தன்னார்வலர்களைக் கொண்டு வகுப்பு நடத்துங்கள். கற்கும் பாரதத்தில் பணி செய்வோருக்கு ஓரிரு தினங்களில் சம்பவளம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.


