/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வாலிபர் சாவில் சந்தேகம்: பிணத்தை தோண்டுவதற்கு எதிர்ப்புவாலிபர் சாவில் சந்தேகம்: பிணத்தை தோண்டுவதற்கு எதிர்ப்பு
வாலிபர் சாவில் சந்தேகம்: பிணத்தை தோண்டுவதற்கு எதிர்ப்பு
வாலிபர் சாவில் சந்தேகம்: பிணத்தை தோண்டுவதற்கு எதிர்ப்பு
வாலிபர் சாவில் சந்தேகம்: பிணத்தை தோண்டுவதற்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே வாலிபர் பிணத்தை தோண்டி எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலூர் அடுத்த முகையூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகன் ஆரோக்கியராஜ்,35. இவர் கடந்த ஜனவரி 22ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை கிறித்துவ முறைப்படி அடக்கம் செய்தனர். தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கடந்த ஜூன் 13ம் தேதி ஆரோக்கியராஜின் தாய் லூர்துமேரி,55 போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக் குப் பதிந்து பிணத்தை தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். திருக்கோவிலூர் தாசில்தார் பார்வதி, இன்ஸ்பெக்டர் கருணாநிதி, அரச டாக்டர் கீதாஞ்சலி உள்ளிட்டோர் நேற்று காலை 10 மணிக்கு முகையூர் சென்றனர். பிரேதத்தை தோண்டி எடுப்பது கிறித்துவ நடைமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மதியம் 3 மணிக்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தியதால் கலைந்து சென்றனர். இதனால் 15 நிமிடம் திருக்கோவிலூர், விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.புகார் அளித்த லூர்துமேரி மற்றும் அவரது மகள் களும் சட்டப்படி பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தினர். இனையடுத்து வேறு தேதியில் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதால் பொதுமக் கள் கலைந்து சென்றனர்.