/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
ADDED : ஆக 29, 2011 12:07 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு, தெற்கு வட்டார வளமையத்தில் நடுநிலைப்பள்ளி
ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.பொள்ளாச்சி வடக்கு வட்டார வள
மையத்தில், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமச்சீர் கல்வி
பாடப்புத்தகங்களை அடிப்படையாக கொண்டு படைப்பாற்றல் கல்வி முறையில்
பாடத்திட்டம் மற்றும் கற்றல் உபகரணங்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம்
நடந்தது.வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆனந்தி பயிற்சி முகாமை துவக்கி
வைத்தார்.
ஆசிரியர் பயிற்றுனர் சரோஜா, கருத்தாய்வு மைய ஒருங்கிணைப்பாளர்
சுகுணாராணி மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர். பயிற்சியில்
உயர் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர்.தெற்கு வட்டார
வள மையத்தில் நடந்த பயற்சி முகாமை, வட்டார வளமைய மேற்பார்வையாளர்
வெள்ளியங்கிரி துவக்கி வைத்தார். உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மாரியப்பன்
முன்னிலை வகித்தார். சமச்சீர் பாடத்திட்டத்தில் படைப்பாற்றல் கல்வி
முறையில் பாடத்திட்டம் தயாரித்தல், 5ம் வகுப்பு பாடத்திட்டத்தை எளிய
முறையில் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.முகாமில்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 210 பேரும், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 121
பேரும் பயிற்சி பெற்றனர்.


