Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/உள்ளாட்சித் தேர்தல் விதிமுறை ரூ. 12.50 லட்சம் வரி வசூல்

உள்ளாட்சித் தேர்தல் விதிமுறை ரூ. 12.50 லட்சம் வரி வசூல்

உள்ளாட்சித் தேர்தல் விதிமுறை ரூ. 12.50 லட்சம் வரி வசூல்

உள்ளாட்சித் தேர்தல் விதிமுறை ரூ. 12.50 லட்சம் வரி வசூல்

ADDED : அக் 07, 2011 01:07 AM


Google News

மாமல்லபுரம் : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், நிலுவை வரிகளை செலுத்தியதால், மாமல்லபுரம் மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகளில், 12 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வசூலானது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல், வரும் 17ம்தேதி மற்றும் 19ம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தாங்கள் செலுத்தவேண்டிய சொத்துவரி உட்பட பல்வேறு வரிகளை நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்பிய வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் வரிகளை செலுத்தினர். இதனால், 8 லட்சத்து, 54 ஆயிரம் ரூபாய் வசூலானது. இதேபோல், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில், 4 லட்ச ரூபாய் வசூலானது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us