தேர்தல் பாதுகாப்பு அதிகாரி நியமனம்
தேர்தல் பாதுகாப்பு அதிகாரி நியமனம்
தேர்தல் பாதுகாப்பு அதிகாரி நியமனம்
ADDED : செப் 26, 2011 09:07 PM
சென்னை : உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பைக் கவனிப்பதற்காக, சென்னை போலீசில், தேர்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக, சென்னை தெற்கு மண்டல மதுவிலக்கு பிரிவு, கூடுதல் துணை கமிஷனர் விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள் ளா ட்சி அமைப்புகளுக்கான தேர்தல், அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு பணி சிறப்பு தேர்தல் அதிகாரியாக, கூடுதல் துணை கமிஷனர் விமலா நியமிக்கப்பட்டுள் ளார். இவர், சென்னை மாநகராட்சியில் இருந்து, 200 வார்டுகள், அவற்றில் உள்ள ஓட்டுச் சாவடிகளின் பட்டியலைப் பெற்று, அவற்றில் பதட்டமான பகுதிகளைக் கண்டறியும் பணியை மேற்கொள்வார். தொடர்ந்து, ஓட்டுச் சாவடிகளில் தேவையான பாதுகாப்பு குறித்தும், ஓட்டுப்பதிவு முடிந்த பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும், இவர் கண்காணிப்பார்.


