குவாரியில் தகராறு இரண்டு பேர் கைது
குவாரியில் தகராறு இரண்டு பேர் கைது
குவாரியில் தகராறு இரண்டு பேர் கைது
ADDED : ஆக 02, 2011 01:01 AM
விழுப்புரம் : மணல் குவாரியில் ஏற்பட்ட தகராறில் இருவர் கைது
செய்யப்பட்டனர்.விழுப்புரம் அடுத்த சாலாமேடு இ.பி., காலனியை சேர்ந்தவர்
செல்வம்.32.
இவருக்கு சொந்தமான இரண்டு டிப்பர் லாரி பிடாகம் அரசு மணல்
குவாரியில் இயங்கி வருகிறது. கடந்த 30ம் தேதி செல்வம் தனது லாரிகளை
வரிசையில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது பிடாகம் காலனியை சேர்ந்த
சத்தியராஜ் 27, மணிகண்டன்,22 இருவரும் தங்களது டிப்பர் லாரியினை முன்னே
நிறுத்துவதற்கு முயன்றனர். இதனை தட்டிக்கேட்ட செல்வத்தை இருவரும் சேர்ந்து
தாக்கி மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம்
தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து சத்தியராஜ், மணிகண்டன் இருவரையும் கைது
செய்தனர்.