Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுகையில் அ.தி.மு.க.,-தி.மு.க., மோதல்? டிஜிட்டல் போர்டு பிரச்னை விஸ்வரூபம்

புதுகையில் அ.தி.மு.க.,-தி.மு.க., மோதல்? டிஜிட்டல் போர்டு பிரச்னை விஸ்வரூபம்

புதுகையில் அ.தி.மு.க.,-தி.மு.க., மோதல்? டிஜிட்டல் போர்டு பிரச்னை விஸ்வரூபம்

புதுகையில் அ.தி.மு.க.,-தி.மு.க., மோதல்? டிஜிட்டல் போர்டு பிரச்னை விஸ்வரூபம்

ADDED : செப் 16, 2011 12:00 AM


Google News

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது.

நேற்று அண்ணாதுரை பிறந்தநாள் விழா என்பதால் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வசதியாக தி.மு.க., வினருக்கு காலை 9 முதல் 9.30 மணி வரையிலும், அ.தி.மு.க.,வினருக்கு 10 முதல் 10.30 மணி வரையிலும் போலீஸார் நேரம் ஒதுக்கியிருந்தனர். இதற்கிடையே காலை ஏழு மணிக்கு நகர அ.தி.மு.க., சார்பில் அண்ணாத்துரை பிறந்தநாள் விழா குறித்த 20 அடிய உயர டிஜிட்டல் போர்டு சிலையின் அருகில் வைக்கப்பட்டது. ஆளுங்கட்சி என்பதால் இதை போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை. நிர்ணயிக்கப்பட்ட நேரம் தாண்டி காலை 9.45 மணிக்கு அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்த தி.மு.க.,வினர் சிலையின் அருகில் அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டை பார்த்து ஆத்திரமடைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் போர்டை அகற்றுமாறு வலியுறுத்தினர். போலீஸார் மறுக்கவே ஆவேசமடைந்த தி.மு.க.,வினர் சிலை முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அ.தி.மு.க., வினர் கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்துகொண்டிருந்தனர். இதை பார்த்த போலீஸாருக்கு டென்ஷன் எகிறியது. 'ஒருமணி நேரத்துக்குள் டிஜிட்டல் போர்டு அகற்றப்படும்' என எஸ்.பி., முத்துசாமி உறுதியளித்ததை தொடர்ந்து தி.மு.க.,வினர் கலைந்து சென்றனர். அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ராமையா, ''அண்ணாதுரை சிலை தி.மு.க.,வினருக்கு மட்டும் சொந்தமானதல்ல. சிலை அருகில் அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள தட்டி போர்டை அகற்ற போலீஸாருக்கு தி.மு.க., மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு ஒருமணி நேரம் கெடு விதித்துள்ளார். போலீஸாரை அகற்ற சொல்வதற்கு பதில் முடிந்தால் நீங்களே அகற்றி பாருங்கள்,'' என சவால் விடுத்தார்.



தகவலறிந்த தி.மு.க.,வினர் நாங்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் என கூறிக்கொண்டு போர்டை அகற்றுவதற்காக மீண்டும் சிலையின் அருகே குவிந்தனர். அங்கு அ.தி.மு.க.,வினரும் குவிந்ததால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து சிலையை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அண்ணாதுரை சிலை அருகில் டிஜிட்டல் போர்டு வைக்க தி.மு.க.,வினருக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us