/உள்ளூர் செய்திகள்/சேலம்/திரவுபதியம்மன் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்திரவுபதியம்மன் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
திரவுபதியம்மன் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
திரவுபதியம்மன் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
திரவுபதியம்மன் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : செப் 17, 2011 03:20 AM
வாழப்பாடி: வாழப்பாடி, செல்வமுத்து மாரியம்மன், திரவுபதியம்மன்
திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான
பக்தர்கள் கலந்து கொண்டனர்.வாழப்பாடியில் அருள்பாலித்து வரும் பழமையான
அக்ரஹாரம் திரவுபதியம்மன் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள செல்வமுத்து
மாரியம்மன் கோவில், செல்லியம்மன் நகர் செல்லியம்மன் கோவில் மற்றும் கணபதி
நகர் முனியப்பன் ஆகிய நான்கு கோவில்களும் புதுப்பிக்கப்பட்டு, மஹா
கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு, யாக பூஜையும்,
நாடிசாந்தனம், ஸ்பர்ஷாகுதி, மஹா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை கடங்கள்
ஆலயம் வருதல் நிகழ்ச்சிகளும், காலை 8 மணிக்கு, மாரியம்மன் திருக்கோவில் மஹா
கும்பாபிஷேகமும், 9 மணிக்கு முனியப்பன் கோவில் கும்பாபிஷேகமும்
நடந்தது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு, திரவுபதியம்மன் திருக்கோவிலில் யாக பூஜையும்,
நாடிசாந்தனம், ஸ்பர்ஷாகுதி, மஹா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனையும், காலை 7
மணிக்கு, திரவுபதியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகமும், 9 மணிக்கு
செல்லியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகமும் நடந்தது. ஏராளமானோ
கலந்துகொண்டனர்.