Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பண்டாரவிளையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி : புதியம்புத்தூர் அணி வெற்றி

பண்டாரவிளையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி : புதியம்புத்தூர் அணி வெற்றி

பண்டாரவிளையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி : புதியம்புத்தூர் அணி வெற்றி

பண்டாரவிளையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி : புதியம்புத்தூர் அணி வெற்றி

ADDED : ஜூலை 24, 2011 01:19 AM


Google News

சாயர்புரம் : சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவிளையில் நடந்த மின்னொளி கபடி போட்டியில் புதியம்புத்தூர் காமராஜர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு பெருங்குளம் நகர சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பண்டாரவிளையில் மின்னொளி கபடி போட்டி இரண்டு நாட்கள் நடந்தது.

இப்போட்டியில் மாவட்ட அளவில் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இறுதி போட்டியில் புதியம்புத்தூர் காமராஜர் அணியும், பண்டாரவிளை ஷெல்டன் அணியும் மோதியது. இதில் புதியம்புத்தூர் காமராஜர் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பெருங்குளம் நகர செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தர், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் சரத்பாலா முதலிடம் பெற்ற புதியம்புத்தூர் காமராஜர் அணிக்கு வெற்றி கோப்பையையும், ரூ.7 ஆயிரத்து 501 ரொக்க பரிசும் வழங்கினார். இரண்டாம் இடம் பெற்ற பண்டாரவிளை ஷெல்டன் அணிக்கு ஏரல் நகர செயலாளர் தேவராஜ் பரிசு கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரத்து ஒன்று வழங்கினார். மூன்றாம் இடம் பிடித்த புதியம்புத்தூர் சூப்பர் டீலக்ஸ் அணிக்கு ரூ.3 ஆயிரத்து 501 பரிசை ஒன்றிய செயலாளர் ராஜனும், நான்காம் இடம் பிடித்த பண்டாரவிளை மேசியா அணிக்கு ரூ.2 ஆயிரத்து 501 பரிசை மாவட்ட கமல்ஹாசன் நற்பணி மன்ற தலைவர் சேகரும், ஐந்தாம் இடம் பிடித்த காயல்பட்டினம் அணிக்கு ரூ.ஆயிரத்து 501ஐ பண்டாரவிளை வைத்தியர் துரைச்செல்வனும், ஆறாம் இடம் பிடித்த கூட்டாம்புளி அணிக்கு ரூ.ஆயிரத்து ஒன்றை இளைஞர் காங்.,தலைவர் தேவபிச்சையும் வழங்கினர். சிறப்பு பரிசுகளை பொய்சொல்லான் வழங்கினார். விழாவில் சமக.,மாவட்ட இளைஞரணி செயலாளர் வில்சன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயசீலன், மாநகர செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மற்றும் ராஜா, பழனிராஜ், சுதாகர், கோயில்ராஜ், பெரியசாமி, ஞானராஜ், பட்டு, யாக்கோபு, திருமணி, சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us