/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/25 பவுன் நகை திருட்டு; எஸ்.பி., விசாரணை25 பவுன் நகை திருட்டு; எஸ்.பி., விசாரணை
25 பவுன் நகை திருட்டு; எஸ்.பி., விசாரணை
25 பவுன் நகை திருட்டு; எஸ்.பி., விசாரணை
25 பவுன் நகை திருட்டு; எஸ்.பி., விசாரணை
ADDED : ஆக 30, 2011 12:54 AM
திருப்பூர் : தாராபுரத்தில் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள், 25.5 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் எஸ்.பி., பாலகிருஷ்ணன் நேற்று விசாரணை நடத்தினார். டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தாராபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் துரைசிங் (62); ஒய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். மனைவி குணசீலை (61). நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்புற கதவு கம்பி நெம்பி திறக்கப்பட்டிருந்தது.படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 25.5 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் குடும்பத்தினர், தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத் தனர். சம்பவ இடத்துக்கு தாராபுரம் டி.எஸ்.பி., கந்தசாமி, இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம், இளமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்கள், வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். எஸ்.பி., பாலகிருஷ்ணன், திருட்டு நடந்த வீட்டில் நேரில் விசாரணை நடத்தினார். தாராபுரம் டி.எஸ்.பி., கந்தசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எடுக்கப்பட்ட கைரேகை, பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


