துணை தாசில்தார் மீது நில அபகரிப்பு வழக்கு
துணை தாசில்தார் மீது நில அபகரிப்பு வழக்கு
துணை தாசில்தார் மீது நில அபகரிப்பு வழக்கு
ADDED : ஆக 28, 2011 03:04 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நில அபகரிப்பு தொடர்பாக துணை தாசில்தார், போலீஸ் கமிஷனர் அலுவலக ஊழியர் மீது வழக்கு பதியப்பட்டது.
மதுரை திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோட்டை சேர்ந்த வள்ளி, திண்டுக்கல் எஸ்.பி., சந்திரசேகரனிடம் அளித்த மனுவில்; 'நிலக்கோட்டை கல்லடிப்பட்டியில் 2.5 ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது. இதை கருமாத்தூர் கோடீஸ்வரி, மொக்கத்தாய், நிலக்கோட்டை பிலவேந்திரன், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலக உதவியாளர் மணி, ராமராஜபுரம் ராஜூத்தேவர், உசிலம்பட்டி துணை தாசில்தார் கோவிந்தராஜன் ஆகியோர் போலி ஆவணம் மூலம் 2007 ல், பத்திர பதிவு செய்தனர்,' என, கூறியிருந்தார். இவர்கள் மீது இன்ஸ்பெக்டர் முருகன், வழக்கு பதிந்தார்.


