/உள்ளூர் செய்திகள்/கரூர்/மக்கள் தொகை குறைவால் மாநகராட்சி வாய்ப்பு பறிபோகும்! கரூரில் புதிய 48 வார்டுகள் விபரம்மக்கள் தொகை குறைவால் மாநகராட்சி வாய்ப்பு பறிபோகும்! கரூரில் புதிய 48 வார்டுகள் விபரம்
மக்கள் தொகை குறைவால் மாநகராட்சி வாய்ப்பு பறிபோகும்! கரூரில் புதிய 48 வார்டுகள் விபரம்
மக்கள் தொகை குறைவால் மாநகராட்சி வாய்ப்பு பறிபோகும்! கரூரில் புதிய 48 வார்டுகள் விபரம்
மக்கள் தொகை குறைவால் மாநகராட்சி வாய்ப்பு பறிபோகும்! கரூரில் புதிய 48 வார்டுகள் விபரம்
ADDED : ஜூலை 26, 2011 12:51 AM
கரூர்: புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் நகராட்சியில் இடம் பெற்றுள்ள புதிய 48 வார்டுகளை பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் மக்கள் தொகை ஐந்து லட்சத்துக்கும் குறைவாக உள்ளதால், மாநகராட்சி ஆவதற்கான வாய்ப்பு குறைந்து விட்டது. மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய், தனிநபர் வருமானம் அடிப்படையில் கரூர் நகராட்சியை பகுதியை விரிவாக்கம் செ ய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கரூ ர், தாந்தோணி, இனாம் கரூர் மற்றும் சணப்பிரட்டி பஞ்சாயத்து பகுதிகள் ஒன்றாக இணைக்கப்படுகிறது. மூன்று நகராட்சி மற்றும் ஒரு பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 80 வார்டுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, 48 வார்டுகளாக குறைக்கப்பட்டு, இனி கரூர் நகராட்சியாக மாற்றப்படவுள்ளது. இனாம் கரூர் நகராட்சி பழைய 12வது வார்டு பகுதிகள், புதிய கரூர் நகராட்சியின் 1வது வார்டாகவும், இனாம் கரூர் நகராட்சியின் 10,11 வார்டுகள் இரண்டாவது வார்டாகவும், 9வது வார்டு, மூன்றாவது வார்டாகவும், 8வது வார்டு நான்காவது வார்டாகவும், 6,7வது வார்டுகள் ஐந்தாவது வார்டாகவும், 13,14வது வார்டுகள் ஆறாவது வார்டாகவும், 15,16 வார்டுகள் ஏழாவது வார்டாகவும், 17வது வார்டு எட்டாவது வார்டாகவும், 18வது வார்டு ஒன்பதாவது வார்டாகவும், 19ம் வார்டு 10வது வார்டாகவும், 1,20,21வது வார்டுகள் 11வது வார்டாகவும், 2வது வார்டு 12வது வார்டாகவும், 3,4வார்டு 13வது வார்டாகவும், 5வது வார்டு கரூர் நகராட்சியின் 14 வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளது. கரூர் நகராட்சி பழைய 4வது வார்டு புதிய 15வது வார்டாகவும், 2,3 வார்டுகள் 16வது வார்டாகவும், 1வது வார்டு 17வது வார்டாகவும், 11,12,13 வார்டுகள் 18வது வார்டாகவும், 14,15 வார்டுகள் 19வது வார்டாகவும், 16,17வார்டுகள் 20வது வார்டாகவும் ,18,19 வார்டுகள் 21வது வார்டாகவும், 8,9.10வது வார்டுகள் 22வது வார்டாகவும், 5,6,7வது வார்டுகள் 23வது வார்டாகவும், 23,24 வது வார்டுகள் 24வது வார்டாகவும், 25,26 வது வார்டுகள் 25வார்டாகவும், 22,27வது வார்டுகள் 26வது வார்டாகவும், 20,21வது வார்டுகள் 27வது வார்டாகவு ம், 28,29வது வார்டுகள் 28வது வா ர்டாகவும், 30,31வது வார்டுகள் 29வது வார்டாகவும், 32,33வது வார்டுகள் 30வது வார்டாகவும், 35,36வது வார்டுகள் 31வது வார்டாகவும், 34வது வார்டுகள் புதிய கரூர் நகராட்சியின் 32வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளது. சணப்பிரட்டி பஞ்சாயத்து பø ழய 1வது வார்டு புதிய கரூர் நகராட்சியின் 33வது வார்டாகவும், 2வது வார்டு 34வது வார்டாகவு ம், 3வது வார்டு 35வது வார்டாகவும், 4,5வது வார்டுகள் 36வதுவா ர்டாகவும் மாற்றப்பட்டுள்ளது. தாந்தோணி நகராட்சியின் பழைய 10,11வது வார்டுகள் புதிய கரூர் நகராட்சியின் 37வது வார்டாகவும், 9வது வார்டு 38வது வார்டாகவும், 5,6வது வார்டுகள் 39வது வார்டாகவும், 17வது வார்டு 40வது வார்டாகவும், 16,18வது வார்டுகள் 41வது வார்டாகவும், 15வது வார்டு 42வது வார்டாகவும், 14வது வார்டு 43வது வார்டாகவும், 1,2வது வார்டுகள் 44வது வார்டாகவும், 4வது வார்டு 45வது வார்டாகவும், 3,7வது வார்டுகள் 46வது வார்டாகவும், 8வது வார்டு 47வது வார்டாகவும், 12,13வது வார்டுகள் புதிய நகராட்சியின் 48வது வார்டாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய கரூர் நகராட்சி எல்லை அரிக்கம்பாளையம் (பழைய இனாம் கரூர் நகராட்சி) பகுதியில் தொடங்கி மட்டிப்பள்ளம் (பழைய தாந்தோணி நகராட்சி) பகுதியில் முடிவடைகிறது. கடந்த 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் தனி மாவட்டமாக செயல்பட்டு வரும் கரூர் மாவட்டத்தில், மாநகராட்சி கிடையாது. எனவே கரூர் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள பஞ்சாயத்துகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையிலும் ஐந்து லட்சம் வரை மக்கள் தொகை இல்லாததால், வரும் உள்ளாட்ட தேர்தலிலும் விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சியாக கரூர் தொடர்ந்து செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.