Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ராயபுரத்தில் மூன்றாவது ரயில் முனையம் தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு கோரிக்கை

ராயபுரத்தில் மூன்றாவது ரயில் முனையம் தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு கோரிக்கை

ராயபுரத்தில் மூன்றாவது ரயில் முனையம் தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு கோரிக்கை

ராயபுரத்தில் மூன்றாவது ரயில் முனையம் தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு கோரிக்கை

ADDED : செப் 10, 2011 03:31 AM


Google News

திருச்சி: 'சென்னை ராயபுரத்தில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்க வேண்டும்' என தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.சென்னையில் ரயில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதமாக சென்ட்ரல், எழும்பூரை தொடர்ந்து மூன்றவதாக ரயில் முனையம் (டெர்மினல்) தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.தாம்பரத்தில் ரயில் முனையம் அமைக்கும்பட்சத்தில் திருச்சி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனிலேயே நிறுத்தப்படும்.

இதன் காரணமாக சென்னை மாநகரின் மையப்பகுதிகளுக்கோ, குறிப்பாக தமிழக அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதிக்களுக்கோ செல்வதுக்கு மேலும் 30 முதல் 35 கி.மீ., போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சென்னை நகர சாலைகளில் 2 மணி நேரம் பயணம் செய்தே அடைய வேண்டியிருக்கும்.ஒரு வேளை ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணம் செய்தாலும் நூற்றுக்கணக்கான ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

தேவையான அளவுக்கு இடவசதி உள்ள மாநகரின் மைய பகுதியில் அமைந்துள்ள ராயபுரத்தில் மூன்றாவது முனையம் அமைந்தால் ஏயை இரண்டு முனையத்துக்கு அருகில் பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் சிறப்புற அமைக்கலாம்.இது போன்ற கருத்தை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக ரயில் பயணிகள் உரிமை கூட்டமைப்பு குழுவினர் அமைப்பாளர் ஜெயச்சந்திரன், செயலாளர் ஜெயப்பிரகாசம், உறுப்பினர்கள் எர்னஸ்ட்பால், மாரிமுத்து ஆகியோர் ஆலோசித்தனர்.கூட்டத்தில், 'சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் ராயபுரத்தில் அமைக்க வலியுறுத்தும் கோரிக்கைக்கு' அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் தமிழ்செல்வம், பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us