Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தாராபுரத்தில் தொழிற்பேட்டை :முதல்வருக்கு வேண்டுகோள்

தாராபுரத்தில் தொழிற்பேட்டை :முதல்வருக்கு வேண்டுகோள்

தாராபுரத்தில் தொழிற்பேட்டை :முதல்வருக்கு வேண்டுகோள்

தாராபுரத்தில் தொழிற்பேட்டை :முதல்வருக்கு வேண்டுகோள்

ADDED : செப் 07, 2011 12:45 AM


Google News
திருப்பூர் : 'தாராபுரத்தில் தொழிற்பேட்டை மற்றும் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்,' என, அமராவதி நதி நீர் பாசன பாதுகாப்பு இயக்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இயக்கத்தின் தலைவர் லிங்கம் சின்னசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தாராபுரம் பகுதி விவசாயம் நிறைந்தது; தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. 1967 முதல் செயல்பட்டு வந்த குளத்துப்பாளையம் கூட்டுறவு நூற்பாலை, நஷ்டத்தில் இயங்குவதாக காரணம்காட்டி, 2003ல் மூடப்பட்டது. இதனால், விவசாயம் சாராத தொழிலாளர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் தொழில் வாய்ப்பு இல்லாமல் பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஊரக தொழில் துறை மானிய திட்டத்தில் தாராபுரம் தாலுகா இடம் பெறவில்லை. இப்பகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.பயன்படாமல் பாழடைந்து வரும் நூற்பாலை வளாகத்தில் 40 கோடி ரூபாய் செலவில் பொறியியல் கல்லூரி அமைக்க திட்டமிடப்பட்டு, முந்தைய ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டது. அத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us