Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கண்தானம் குறித்து விழிப்புணர்வு : வனஜா வைத்தியநாதன் பேச்சு

கண்தானம் குறித்து விழிப்புணர்வு : வனஜா வைத்தியநாதன் பேச்சு

கண்தானம் குறித்து விழிப்புணர்வு : வனஜா வைத்தியநாதன் பேச்சு

கண்தானம் குறித்து விழிப்புணர்வு : வனஜா வைத்தியநாதன் பேச்சு

ADDED : ஜூலை 25, 2011 12:11 AM


Google News

புதுச்சேரி : கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டாக்டர் வனஜா வைத்தியநாதன் பேசினார்.

புதுச்சேரி அவ்வை நகர் மகளிர் சங்கம், ஜோதி கண் மருத்துவமனை இணைந்து தட்டஞ்சாவடி டான் பாஸ்கோ பாயிஸ் ஹோமில் இலவச கண் சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவி உமாபார்வதி வரவேற்றார். பாயிஸ் ஹோம் இயக்குனர் ஜரால்டு மஜால்லா முன்னிலை வகித்தார். சங்க உபதலைவி உமா சேகர், பொருளாளர் சாரதா, செயற்குழு உறுப்பினர்கள் அனுராதா, மீனாட்சி, ராஜேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் ஜோதி கண் பராமரிப்பு மருத்துவமனையின் டாக்டர் வனஜா வைத்தியநாதன் தலைமையில் மருத்துவக்குழுவினர் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.



விழாவில் டாக்டர் வனஜா வைத்தியநாதன் பேசியதாவது: கண் வாழ்க்கையின் ஒரு ஒளி. கீரை, பால், முட்டை போன்ற உணவு பொருட்களைப் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வியாதிகள் வராமல் தடுப்பது மிக அவசியம். படிக்கும் போது, நேராக அமர்ந்து படிக்க வேண்டும். அப்போது தான் தலைவலி, கழுத்து வலி வராது. கண்களை 3 வயதிற்குள் ஒரு முறையும், 10 வயதிற்குள் 3 முறையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நிரந்தரமாக பார்வை இழக்க நேரிடும். சோம்பல் கண் வந்து விடும். பட்டாசு வெடிக்கும் போதும், ஆபத்தான விளையாட்டில் ஈடுபடும் போதும், கவனமாக இருக்க வேண்டும். கூரான பொருட்கள் கண்களில் படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இறந்த பின் உங்களது கண்களை தானம் செய்ய வேண்டும். கண்தானம் அவசியமான ஒன்று. கண்தானம் குறித்து நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கண் தானம் செய்ய விரும்ப முள்ளவர்கள் விருப்ப கடிதம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us