குவியும் நிலமோசடி வழக்குகள் ஆதாரங்களை தேடும் போலீசார்
குவியும் நிலமோசடி வழக்குகள் ஆதாரங்களை தேடும் போலீசார்
குவியும் நிலமோசடி வழக்குகள் ஆதாரங்களை தேடும் போலீசார்
ADDED : ஜூலை 26, 2011 12:51 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலமோசடி தொடர்பாக 70 புகார்கள் வந்துள்ள நிலையில், உரிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு பதிவு செய்வதில் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலமோசடி தடுப்பு பிரிவு துவங்கப்பட்டு, மக்களிடம் புகார்கள் வாங்க துவங்கினர். பெரும்பாலும் தி.மு.க., நிர்வாகிகள், உள்ளாட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் மீது ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் 70 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய தகவலையும் போலீசார் வெளியிடவில்லை. நிலமோசடி தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர்,''குறைதீர் கூட்டத்தில் ஏராளமான புகார்கள் வருகின்றன. விசாரிக்கும் போது பெரும்பாலும் பாகப்பிரிவினை பிரச்னையாகவே உள்ளது. கட்சி முக்கிய புள்ளிகள் மீதோ, அரசு இடத்தையோ அபகரித்ததாகவோ இதுவரை புகார் வரவில்லை. எங்களிடம் வரும் அனைத்து புகார்களையும் தீவிரமாக விசாரித்து, உரிய ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் மட்டும் வழக்கு பதிவு செய்கிறோம்,'' என்றார்.