Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அனுமதியின்றி மணல் எடுத்த 3 டிராக்டர்கள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் எடுத்த 3 டிராக்டர்கள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் எடுத்த 3 டிராக்டர்கள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் எடுத்த 3 டிராக்டர்கள் பறிமுதல்

ADDED : ஜூலை 27, 2011 01:28 AM


Google News

காரைக்கால் : காரைக்காலில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 டிராக்டர்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

காரைக்கால் ஆற்று கரையோரங்களில் அனுமதியின்றி டிராக்டர்கள் மூலம் மணல் எடுத்து வருவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நிரவிப்பகுதியில் வருவாய்த்துறையினர் மேற்கொண்ட சோதனையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், கோபால் ஆகியோர் 3 டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மணல் மற்றும் டிராக்டர்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து காரைக்கால் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தி வைத் துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us