Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உள்ளாட்சித் தேர்தல் வெற்றியே நம் இலக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ

உள்ளாட்சித் தேர்தல் வெற்றியே நம் இலக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ

உள்ளாட்சித் தேர்தல் வெற்றியே நம் இலக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ

உள்ளாட்சித் தேர்தல் வெற்றியே நம் இலக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ

ADDED : ஜூலை 27, 2011 03:44 AM


Google News
Latest Tamil News
மதுரை:''உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெற்றி பெற வேண்டும். அதற்கான பணியை நாம் இப்போதே துவக்க வேண்டும்,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.மதுரையில் அ.தி.மு.க.,ஊழியர் கூட்டம் நடந்தது. நகர் அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். போஸ் எம்.எல்.ஏ.,வரவேற்றார்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெற்றி பெற வேண்டும். அதற்கான பணியை நாம் இப்போதே துவக்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவை நம்பி கெட்டவர் யாருமில்லை. நம்பாமல் கெட்டவர்கள்தான் உள்ளனர் என்றார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: தமிழகத்தை சுத்தப்படுத்தும் பணியையும், தர்மயுத்தத்தையும் முதல்வர் துவக்கியுள்ளார். இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க சட்டசபையில் தீர்மானம் இயற்றியதன் மூலம், அவரை உலகத் தமிழர்கள் பாராட்டுகின்றனர் என்றார்.

தி.மு.க.,ஆட்சியில் பறிக்கப்பட்ட நிலங்களை, உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை; ஆக.,15 முதல் அரசு கேபிள் 'டிவி' துவக்கப்படுவதை வரவேற்றல்; உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு பாடுபடுதல் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.விருந்து: தொண்டர்களுக்கு கேசரி, வெண்பொங்கல், சாம்பார், சட்னி, உளுந்தவடை, இனிப்பு, காரம், காபி வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us