லோக்பால் மசோதா: அன்னா குழு நம்பிக்கை
லோக்பால் மசோதா: அன்னா குழு நம்பிக்கை
லோக்பால் மசோதா: அன்னா குழு நம்பிக்கை
ADDED : ஆக 28, 2011 03:27 PM
புதுடில்லி: லோக்பால் மசோதாவை மத்திய அரசு சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து நிறைவேற்றும் என அன்னா குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள வக்கீல் பிரஷாந்த் பூஷன் கூறுகையில், எங்களின் முக்கிய 3 கோரிக்கைகளை சேர்த்து லோக்பால் மசோதாவை பார்லிமென்ட் நிலைக்குழுவிற்கு அனுப்பும் என கூறியது. லோக்பால் மசோதாவை சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தை கூட்டி நிறைவேற்றும். பார்லிமென்ட் நிலைக்குழுவும் விரைவில் தனது பணியை நிறைவு செய்யும் என கூறினார். இந்நிலையில் அன்னா குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து பேட்டியளித்த அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள மேதா பட்கர் கூறுகையில், எங்களிடம் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. நானும் பிரஷாந்த் பூஷனும் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டதால், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றதாக கூறப்படுவதும் தவறு. போராட்டம் துவங்கிய நாள் முதல் நானும் பிரஷாந்த் பூஷனும் பல தரப்பட்ட மக்களை சந்தித்தோம், பல நடவடிக்கையிலும் ஈடுபட்டோம். எங்களது கொள்கை தெளிவாக இருந்தது.ஒன்றாக சேர்ந்து முடிவெடுத்தோம் என கூறினார்.


