நாமக்கல்: நாமக்கல் அடுத்த எலச்சிபாளையம் யூனியன், பெரியமணலி பள்ளித்
தொகுப்பு கருத்தாய்வு மையத்தில், எளிய ஆங்கில பயிற்சி வகுப்பு நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் மலர்விழி தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி
வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். ஆசிரியர்
பயிற்றுனர்கள் சுடர்மணி, மகேஸ்வரி, சுகந்தி ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.அடிப்படை ஆங்கிலம், கலந்துரையாடல், இலக்கணம், வாக்கிய அமைப்பு,
வினாக்கள் அமைப்பு, சிந்தனையை தூண்டும் சொற்கள் உருவாக்கும் குறித்து
விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் சிவகாமி,
குருக்கப்புரம் பள்ளி தலைமையாசிரியர் காளியண்ணன், ஆசிரியர் பயிற்றுனர்கள்,
ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


