/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சாந்தூர் கூட்டுறவு சங்கத்தில் டெபாசிட் சேகரிப்பு முகாம்சாந்தூர் கூட்டுறவு சங்கத்தில் டெபாசிட் சேகரிப்பு முகாம்
சாந்தூர் கூட்டுறவு சங்கத்தில் டெபாசிட் சேகரிப்பு முகாம்
சாந்தூர் கூட்டுறவு சங்கத்தில் டெபாசிட் சேகரிப்பு முகாம்
சாந்தூர் கூட்டுறவு சங்கத்தில் டெபாசிட் சேகரிப்பு முகாம்
ADDED : ஆக 22, 2011 11:34 PM
ஊட்டி : ஊட்டி அருகே சாந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே நாளில் 1.18 லட்சம் ரூபாய் டெபாசிட் திரட்டப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள 75 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் டெபாசிட் சேகரிப்பு முகாம்கள் நடந்து வருகிறது. சாந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த டெபாசிட் சேகரிப்பு முகாமில், மண்டல இணை பதிவாளர் தயாளன் பேசுகையில், ''இச்சங்கத்தின் மூலம் இதுவரை 50 லட்சம் ரூபாய் நகை கடன் வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தில் 1,644 உறுப்பினர்கள் உள்ளனர்.
உறுப்பினர்கள் வாங்கிய பயிர்கடன் அனைத்தையும் திருப்பி செலுத்தியுள்ளனர். 4 லட்சம் ரூபாய் கறவை மாட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. 31 லட்சம் ரூபாய் விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது. வைத்தியநாதன் கமிட்டியின் பரிந்துரையின்படி 50 லட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளது,'' என்றார். தொடர்ந்து 1.18 லட்சம் ரூபாய் டெபாசிட்தாரர்களுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டன. சுய உதவி குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. துணைப்பதிவாளர் ஜீவா, மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் மணி, சங்கத்தின் தனி அலுவலர் ராமன், கூட்டுறவு பிரச்சார அலுவலர் தர்மன், சோரகுண்டு ஊர் தலைவர் சிம்மன், கெரடா ஊர் தலைவர் ஜோகி ஆகியோர் பேசினர். சங்க செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


