/உள்ளூர் செய்திகள்/தேனி/வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடத்த உத்தரவுவாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடத்த உத்தரவு
வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடத்த உத்தரவு
வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடத்த உத்தரவு
வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடத்த உத்தரவு
ADDED : ஆக 18, 2011 09:26 PM
தேனி:வரும் அக்டோபரில் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம்களை நடத்த
தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அக்டோபர் முதல் தேதி வரைவு வாக்காளர்
பட்டியல் வெளியிடப்படுகிறது.
அன்று முதல் நவம்பர் முதல் தேதி வரை அனைத்து
ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள், சேர்த்தல், நீக்கல், முகவரி
மாற்றும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அக்டோபர் 9, 16, 23ல் சிறப்பு
முகாம்கள் நடத்தப்படுகிறது.ஓட்டுச்சாவடி மைய அலுவலர்கள் வாக்காளர்களிடம்
இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வார்கள். இந்த முகாம்களில்
வாக்காளர்களுக்கு வழிகாட்டும் பணிக்காக அரசியல் கட்சியினர் தங்களது
ஏஜன்ட்களை நியமித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.


