Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/தஞ்சை, திருவாரூர், நாகைக்கு ரூ.38 கோடி கடன்

தஞ்சை, திருவாரூர், நாகைக்கு ரூ.38 கோடி கடன்

தஞ்சை, திருவாரூர், நாகைக்கு ரூ.38 கோடி கடன்

தஞ்சை, திருவாரூர், நாகைக்கு ரூ.38 கோடி கடன்

ADDED : ஆக 06, 2011 02:05 AM


Google News
திருத்துறைப்பூண்டி: நடப்பாண்டில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்துக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் கடன் வழங்க ரூபாய் 38 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மண்டல மேலாளர் சண்முகம் தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக சார்பில் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், வழங்கி வரும் கடன் தொடர்பாகவும் சிறப்பு கூட்டம் திருச்சி மண்டல மேலாளர் சண்முகம் தலைமையில் நடந்தது. தஞ்சாவூர் கிளை மேலாளர் ஏகாம்பரம் வரவேற்றார். இதில் வர்த்தக சங்க தலைவர் செந்தில்நாதன், லயன்ஸ் சங்க தலைவர் செல்வகணபதி, ஜே.சி.ஸ்., சங்க தலைவர் செல்வகுமார், பேக்கரி உரிமையாளர் சேகர், மில் அதிபர் சுப்பையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மண்டல மேலாளர் சண்முகம் பேசியதாவது: சென்னையை தலைமையிடமாக கொண்டும், திருச்சியை மண்டலமாக கொண்டு திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுபுரம், கடலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. 62 வருட காலமாக சிறு தொழில்புரிவோருக்கு கடன் வழங்கி அவருடைய தொழிலை மேம்படுத்த பயன்பட்டு வருகிறது. நடப்பாண்டில் முதலீட்டு கழகத்தின் சார்பில் ஆயிரத்து 350 கோடி கடன் வழங்கவும், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு ரூபாய் 38 கோடி கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு அரிசி ஆலையை மேம்படுத்த ரூபாய் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. தொடர்ந்து கடன் வாங்கி மூன்று ஆண்டுகள் கட்டியிருந்தால் திருச்சி மண்டல அலுவலகத்தின் மூலம் ரூபாய் 75 லட்சம் வரை கடன் வழங்க முடியும். புதிய தொழில் தொடங்க ரூபாய் ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை கடன் வழங்க இயலும். தலைமை அலுவலகத்தின் மூலம் ரூபாய் 20 கோடி வரை கடன் பெற இயலும். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர், தம்பிக்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகமாக இருப்பதால், தென்னை சார்ந்த தொழில்கள் தொடங்க இளைஞர்கள் முன்வர வேண்டும். அதற்கு கடன் வழங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தயாராக இருக்கிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தொழில் தெரிந்தவர்களுக்கு குறைந்த பட்சம் ரூபாய் ஐந்து லட்சம் முதல் 30 லட்சம் வரை கடன் பெற இயலும். தொழில் தெரிந்து எந்தவித சொத்தும் இல்லாதவருக்கு உத்திரவாதம் இல்லாமல் ரூபாய் ஒரு லட்சம் வரை கடன் வழங்க இயலும். இதற்கு அப்பகுதியில் அவர் நற்சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். கடந்தாண்டு இதன் அடிப்டையில் இரண்டாயிரம் பேருக்கு ரூபாய் 20 கோடி வரை கடன் வழங்கப்பட்டு முறையாக கட்டி வருகிறார்கள். தொழில் தெரிந்தவர்கள் தமிழ்நாடு சிறு தொழில் முதலீட்டு கழகத்தை அணுகி கடன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us